Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பாடசாலை பாலியல் துஷ்பிரயோக விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2023 • 12:24 AM

பாடசாலை பாலியல் துஷ்பிரயோக விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார் .
  • குறித்த வழக்கு நேற்று (7) சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி.
  • கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியலும் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலை அதிபரை தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
  • இந்த நிலையில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபரான ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேக நபரை நிந்தவூர் பொலிஸார் நேற்று (07) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
எழுத்து அளவு:

நபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான்  உத்தரவிட்டார் .

குறித்த வழக்கு நேற்று (7) சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியலும்   இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள  பாடசாலை  அதிபரை  தலா  ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்  பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல   அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ள சந்தேக நபர் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி     விளையாட்டு அறையில் வைத்து   மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு  உட்படுத்த முயற்சித்ததாக  தெரிவித்து ஓகஸ்ட்   2 ஆம் திகதி  அம்மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இந்த நிலையில்    தலைமைறைவாகி இருந்த சந்தேக நபரான ஆசிரியர் கடந்த   ஞாயிற்றுக்கிழமை (6)  மாலை தனது  சட்டத்தரணி ஊடாக  பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேக நபரை நிந்தவூர் பொலிஸார்  நேற்று (07) சம்மாந்துறை நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட  குறித்த மாணவன்   அதிபரிடம்   முறையிட்டுள்ளதுடன்   இரு வாரங்கள் கழிந்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பாடசாலையின்அதிபராக ஏ.அப்துல் கபூர் என்பவரும் உடற்கல்வி ஆசிரியராக 47 வயது மதிக்கத்தக்க ஏ.பைஸர் என்பவரும் செயற்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...