Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி அலுவலகத்தை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 8, 2023 • 2:53 PM

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி அலுவலகத்தை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
  • இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்த, கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
  • ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இலங்கையின் ஆட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் இடமாக அதன் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
எழுத்து அளவு:

அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்த, கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி உயர் பெண்கள் பாடசாலையின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று இலங்கைப் பாராளுமன்றம், கொழும்பு துறைமுக நகரம், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்ததுடன், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் ஜனாதிபதியுடனான சிநேகபூர்வ சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இலங்கையின் ஆட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் இடமாக அதன் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி,  எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

உயர்தரத்தில் கலைப்பிரிவு பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம் போன்ற ஏனைய பாடங்களையும் கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் மூலம் 2048 அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்திற்குத் தேவையான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி அலுவலகத்தை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகள் இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன், பல புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

அதிபர் திருமதி எம். அபேகுணசேகர மற்றும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...