Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சிறுமி ஃபஸ்லிமின் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு

T

The Leader Desk

ஆகஸ்ட் 8, 2023 • 4:02 AM

சிறுமி ஃபஸ்லிமின் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அறிக்கையில் முரண்பாடுகளும் தெளிவின்மையும் காணப்படுவதால் கிடைக்கப்பெற்ற அனைத்து அறிக்கைகளின் அடிப்படையிலும் விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று பொரளை பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
  • இதனை தொடர்ந்து, அவருடைய ஒரு சிறுநீரகத்தை மாத்திரம் அகற்ற வேண்டுமென வைத்தியர்கள் வலியிறுத்தியதையடுத்து, குறித்த குழந்தைக்கு கடந்த வருடம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மருத்துவ நிபுணர் டாக்டர் வை.எல்.எம்.
எழுத்து அளவு:

அறிக்கையில் முரண்பாடுகளும் தெளிவின்மையும் காணப்படுவதால் கிடைக்கப்பெற்ற அனைத்து அறிக்கைகளின் அடிப்படையிலும் விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று பொரளை பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மருத்துவ நிபுணர் டாக்டர் வை.எல்.எம். யூசுப்பின் சாட்சியத்தின்படி, குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியதாக டாக்டர் யூசுப் தனது விளக்கத்தின் போது நீதவானிடம் தெரிவித்தார்.

குழந்தையின் இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாகவும், வலது சிறுநீரகம் சாதாரணமாக செயல்படுவதாகவும் அறிக்கைகள் உறுதிப்படுத்தின.

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த சிறுமியின் கடைசி தருணங்களை நன்கு அறிந்தும் வைத்தியாசாலையில் இருந்த தாதிமார் மற்றும் வைத்தியர்கள் அவருக்கான சிகிச்சையை உரிய முறையில் வழங்கவில்லை என லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் பெற்றோர்,

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருடைய ஒரு சிறுநீரகத்தை மாத்திரம் அகற்ற வேண்டுமென வைத்தியர்கள் வலியிறுத்தியதையடுத்து, குறித்த குழந்தைக்கு கடந்த வருடம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், சத்திர சிகிச்சையின் போது வைத்தியர்கள் கவனயின்மையால் குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனை சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்தியர்கள் அறிந்து கொண்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தரப்பில் நடந்த தவறை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது குழந்தைக்கு நான்கு மாதங்களில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்வதாக வைத்தியர்கள் உறுதியளித்திருந்தாலும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஹம்தி பஸ்லிமுக்கு சுமார் ஏழு மாத காலத்துக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், சரியான சிகிச்சைகள் வழங்கப்படாத காரணத்தால் அவர் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர்களின் கவனக்குறைவால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட தமது குழந்தையின் நிலை குறித்து அறிந்திருந்தாலும், இது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஹம்தி பஸ்லிமின் பெற்றோர் மேலும் கூறியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...