Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மீண்டும் முன்வைக்கப்படவுள்ள முக்கிய அமைச்சரவை பத்திரம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2023 • 4:40 AM

மீண்டும் முன்வைக்கப்படவுள்ள முக்கிய அமைச்சரவை பத்திரம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (07) மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
  • இந்த நிலையில், சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
  • இந்த அமைச்சரவைப் பத்திரம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எழுத்து அளவு:

இன்று (07) மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் வளவ பிரதேச விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு தீர்வாக சமனல ஏரியின் நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் எழுந்துள்ளதுடன், இது தொடர்பான பிரேரணை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்குவதற்கு சில தரப்பினர் நேரடியாக தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படாமையால் விவசாயிகள் படும் இன்னல்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய அகில இலங்கை கமநல சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

வளவ பிரதேச விவசாயிகளின் நீர் பிரச்சினையை தீர்ப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவதனால் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்ய தீர்மானித்ததாக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் விவசாய ஹர்த்தாலை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நீர்ப் பிரச்சினை நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிப்பதால், நீதித்துறைக்கு தலையிடும் வாய்ப்பு காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி மயூர குணவங்ச தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...