Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தூக்கிலிட்ட இலங்கையரை தேடிவந்த பெண்கள்

T

The Leader Desk

ஆகஸ்ட் 3, 2023 • 10:01 AM

தூக்கிலிட்ட இலங்கையரை தேடிவந்த பெண்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரேத பரிசோதனை நேற்று (02) நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறவிருந்து.
  • இதன்போது அங்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாக குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை பணிகள் இன்று (03) வரை ஒத்திவைக்கப்பட்டது.
  • உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
  • கடந்த 27ம் திகதி குவைத்தில் அவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல் வெளியானது.
எழுத்து அளவு:

பிரேத பரிசோதனை நேற்று (02) நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறவிருந்து.

இந்த நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ​​இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு வந்துள்ளனர்.

இதன்போது அங்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாக குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை பணிகள் இன்று (03) வரை ஒத்திவைக்கப்பட்டது.

உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

கடந்த 27ம் திகதி குவைத்தில் அவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல் வெளியானது.

வைத்தியசாலைக்கு வந்த மூன்று பெண்களில் ஒருவர் ஓமனில் பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.

அவருக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆவதாக சாட்சி அளித்ததாகவும் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தந்தை குவைத்தில் தூக்கிலிடப்பட்டதாக யூடியூப் மூலம் அறிந்ததாக எனது மகன் கூறினான்.எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதையறிந்து இலங்கை வந்தேன். அவரது சடலம் விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனது கணவர் மேலும் இருவரை திருமணம் செய்துள்ளதாக பின்னர் அறிந்தேன். நான் சடலத்தை ஏற்க விரும்பவில்லை, ஆனால் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பளிக்கவும் என்றார்.

எனினும், இறந்தவரின் மனைவிகள் என கூறப்படும் மூவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு திருமண சான்றிதழ்கள் மற்றும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்தகட்ட பணிகள் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...