Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

நீர் கட்டண மாற்றம் தொடர்பான முழு விபரம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 3, 2023 • 10:00 AM

நீர் கட்டண மாற்றம் தொடர்பான முழு விபரம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுப் பாவனைக்கான நீரின் முதல் 5 அலகுகளுக்கான கட்டணம் 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக, நுகர்வோரின் கழிவுநீர்க் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
  • புதிய கட்டண உயர்வுகள் பின்வருமாறு, 0 - 5 ஒரு அலகு 60 ரூபா மாத கட்டணம் 300 ரூபா 6 -10 ஒரு அலகு 80 ரூபா மாத கட்டணம் 300 ரூபா 11 -15 ஒரு அலகு 100 ரூபா மாத கட்டணம் 300 ரூபா 16 - 20 ஒரு அலகு 110 ரூபா மாத கட்டணம் 400 ரூபா 21 - 25 ஒரு அலகு 130 ரூபா மாத கட்டணம் 500 ரூபா.
எழுத்து அளவு:



இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் பெருந்தோட்ட வீடுகளுக்கான நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுப் பாவனைக்கான நீரின் முதல் 5 அலகுகளுக்கான கட்டணம் 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தத்தில் பொது குடிநீர் குழாய்கள், பூங்கா நீர் குழாய்கள், அரசாங்க பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க  மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

ஒரு அலகிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக, நுகர்வோரின் கழிவுநீர்க் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

புதிய கட்டண உயர்வுகள் பின்வருமாறு,

0 - 5 ஒரு அலகு 60 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

6 -10 ஒரு அலகு 80 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

11 -15 ஒரு அலகு 100 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

16 - 20 ஒரு அலகு 110 ரூபா
மாத கட்டணம் 400 ரூபா

21 - 25 ஒரு அலகு 130 ரூபா
மாத கட்டணம் 500 ரூபா

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...