Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மஸ்கெலியாவில் உலக சாதனை படைத்த சிறுமி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2023 • 3:35 AM

மஸ்கெலியாவில் உலக சாதனை படைத்த சிறுமி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சென் ஜோசப் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் விக்னேஸ்வரன் சஸ்மிதா என்ற சிறுமி 18 நிமிடங்களில் நடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
  • இந்த நிகழ்வு இன்று (31) இடம்பெற்றது.
  • சோழன் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன் சஸ்மிதா, எனது தந்தை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடை பயணமாக வந்து சாதனை படைத்தார்.
எழுத்து அளவு:

சென் ஜோசப் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் விக்னேஸ்வரன் சஸ்மிதா என்ற சிறுமி 18 நிமிடங்களில் நடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த நிகழ்வு  இன்று (31)  இடம்பெற்றது.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று நல்லத்தண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் பிரவுண்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த போட்டியினை மஸ்கெலிய மாவட்ட வைத்திய அதிகாரி ஆரம்பித்து வைத்தார். 

இதன் போது குறித்த  சிறுமிக்கு வீதியின் இரு புறங்களிலும் மக்கள் பலத்த ஆரவாரத்தை வழங்கினர்.

பிரவுன்லோ தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சாதனை நடை பயணத்தில் கலந்து கொண்ட சிறுமிக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன் சோழன் உலக சாதனை சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சோழன் இலங்கை கிழைத்தலைவர் யூட் நிமலன் பிரதேச பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன் சஸ்மிதா, எனது தந்தை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடை பயணமாக வந்து சாதனை படைத்தார். ஆகையால் தானும் ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்ற நோக்கில் எனது முதலாவது நடை பயண சாதனையை சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டதோடு, மலையகத்திலுள்ள ஏனைய சிறுவர்களும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மஸ்கெலியாவில் உலக சாதனை படைத்த சிறுமி! | Tamil Leader | We Lead the Nation