Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்டுள்ள அறிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2023 • 3:32 AM

எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்டுள்ள அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றாலும்,மோசடியான அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அது பற்றி எந்தவித அக்கறையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
  • குளிரூட்டி அறைகளில் இருந்து அரசாங்கம் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் பாரிய அனர்த்தம் ஏற்படுவதை தடுக்க முடியாதுபோகும் என்பதோடு,உரத்தடைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தன்னிச்சையான முடிவுகளை அரசாங்கம் நினைவுகூர வேண்டுமென நினைவூட்டுகின்றோம்.
  • அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றாலும்,மோசடியான அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அது பற்றி எந்தவித அக்கறையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், 

கதிர் விட்டுவரும் நெற் செய்கை வயல்களுக்கு தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றாலும்,மோசடியான அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அது பற்றி எந்தவித அக்கறையும் இல்லை

சுமார் 75,000 ஏக்கர் பயிரிடப்பட்ட காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்க அரசாங்கம் இன்னும் தவறிவிட்டது,அதில் 65,000 ஏக்கரில் மட்டும் நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது.தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு எதிர்வரும் வாரத்தில் நெற் செய்கையில் 16.81 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டி அறைகளில் இருந்து அரசாங்கம் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் பாரிய அனர்த்தம் ஏற்படுவதை தடுக்க முடியாதுபோகும் என்பதோடு,உரத்தடைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தன்னிச்சையான முடிவுகளை அரசாங்கம் நினைவுகூர வேண்டுமென நினைவூட்டுகின்றோம்.

நாடு மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், நாடு முழுவதும் சோறு போடும் விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவதனால் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் மட்டுமல்லாது நாடு முழுதும் அனுபவிக்க நேரிடும் எனவும் நாட்டின் விவசாயத்தை முடக்குவதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் நுட்பமான மற்றும் தந்திரமான முயற்சியா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

விவசாயிகளை மேலும் ஏமாற்றாமல் அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான தண்ணீரை அரசாங்கம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கம் எப்பொழுதும் மக்களுக்கு சார்பான செயற்பாடுகளையேயன்றி மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்து வருகின்றது.அதன் விளைவுகள் அரசாங்கத்துக்கு பேரிடியாக விழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...