Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

நாட்டில் முதலீடு செய்ய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள்!

T

The Leader Desk

ஜூலை 31, 2023 • 4:24 AM

நாட்டில் முதலீடு செய்ய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
  • ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, வர்த்தக வசதிகள் மேம்படுத்தல் குறிகாட்டியில் இன்று நாம் 99 வது இடத்தில் இருக்கிறோம்.
  • நாமும் அத்தகைய திட்டத்திற்கு செல்ல வேண்டும்.
எழுத்து அளவு:

வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி, நாட்டில் வர்த்தகம் மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், முதலீடு மற்றும் வியாபாரத்தை ஊக்குவிப்பதில் அதிகாரிவர்க்க ஆட்சி பாரிய தடையாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், நிர்வாக செயற்பாடுகளுக்கு அரச சேவை முகாமைத்துவ கொள்கையே தேவை எனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே,

வர்த்தக வசதிகள் மேம்படுத்தல் குறிகாட்டியில் இன்று நாம் 99 வது இடத்தில் இருக்கிறோம்.

இதனுடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி பணிகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி எமக்கு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளார். அத்துடன், இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது. பாராளுமன்றம் வழங்கிய பொருத்தமான பரிந்துரைகள் உடனடியாகவும், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திலும் செயல்படுத்தப்படும்.

நாட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒரே கட்டமைப்பில் பதிவு செய்தல், ஒவ்வொரு நிறுவனத்தாலும் தரவு மற்றும் தகவல் அமைப்புகளைப் பேணுதல் மற்றும் தகவல்களை ஒரே தரவு அமைப்பில் பேணுதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக, நாட்டில் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர் ஒருவர் நாட்டுக்கு வரும் போது , ​​சம்பந்தப்பட்ட துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற காணி எங்குள்ளது என்பதைத் துல்லியமாக அறியும் தரவுக் கட்டமைப்பு இன்னும் நம் நாட்டில் இல்லை. ஆனால் இந்தியாவில் காணி தொடர்பான தரவுத் தகவல் வங்கி உள்ளது. நாமும் அத்தகைய திட்டத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் சட்ட கட்டமைப்பு நம் நாட்டில் இல்லை. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெறுவதற்கு கடந்த அரசாங்கம் வணிக உயர் நீதிமன்றங்களை நிறுவியது. ஆனால், எதிர்பார்த்தபடி, தேவை பூர்த்தியாகாததால், முதலீட்டாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான அரச அதிகாரிகளுக்கு நிர்வாக மனப்பான்மையே தவிர முகாமைத்துவ மனப்பான்மை இல்லை. எனவே, அரச அதிகாரிகளுக்கு தொழில்முயற்சி குறித்து பரவலாக அறிவூட்ட வேண்டிய தேவையும், நிர்வாகத்திற்கு பதிலாக முகாமைத்துவ அரச சேவையின் தேவையும் எழுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல கேபிள் கார் நிறுவனம் எமது நாட்டில் கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்க முன்வந்தது. அதற்கான 3 இடங்கள் அடையாளங் காணப்பட்டன.இந்தத் திட்டத்திற்கு 15 நிறுவனங்களின் அனுமதியைப்பெற வேண்டியிருந்தது. ஆனால் இதே திட்டம் நேபாளம் மற்றும் டொமினிக் குடியரசு என்பவற்றுக்கும் கிடைத்தன. அங்கு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.65 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தத் திட்டத்திற்கு இன்னும் நமது நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

இது போன்ற ச்சினைகளை அடையாளங்கண்டு ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இனங்காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது . எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் மாதமளவில் இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...