Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

வாழைச்சேனையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய விபத்து

T

The Leader Desk

ஜூலை 30, 2023 • 8:12 AM

வாழைச்சேனையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய விபத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (29) இரவு 6.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
  • சம்பவத்தில் ஓமனியாமடு 2ம் பரம்பரை பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே உயிரிழந்தார்.
  • இதனையடுத்து பவுசரின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் தண்ணீர் பவுசர் மீது தீவைத்ததையடுத்து பவுசர் முற்றாக தீயில் எரிந்துள்ளது.
எழுத்து அளவு:

சிக்கிய உயிரிழந்தார்.

நேற்று (29) இரவு 6.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் ஓமனியாமடு 2ம் பரம்பரை பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே உயிரிழந்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மண் களுஞ்சியபடுத்தும் இடத்திற்கு மண்ணை கழுவுவதற்காக  தண்ணீர் கொண்டு சென்ற பவுசர் பின்புறம் நோக்கி பயணிக்க முற்பட்ட போது,  10 வயது அண்ணன் தனது 6 வயது தம்பியை சைக்கிள் ஒன்றில்   ஏற்றிவந்த நிலையில், பவுசரில் மோதிய விபத்தில் 6 தம்பி உயிரிழந்ததுடன் அண்ணன்  உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து பவுசரின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் தண்ணீர் பவுசர் மீது தீவைத்ததையடுத்து பவுசர்  முற்றாக தீயில் எரிந்துள்ளது.

பின்னர் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் தப்பி ஓடிய சாரதி மற்றும் உதவியாளர் இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுபாட்டிற்கு கொண்டுவந்ததுடன் மடக்கி பிடித்த சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்ததுடன் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த மண் களஞ்சியப்படுத்தும் இடம் சட்டவிரோதமாக அனுமதி எதுவும் இன்றி இயங்கி வருவதாகவும் இதற்கு எதிராக பிரதேச மக்கள் சம்மந்தப்பட் அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்தபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...