Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

யாழ் மாவட்ட உணவகங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

T

The Leader Desk

ஜூலை 29, 2023 • 3:38 AM

யாழ் மாவட்ட உணவகங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிவபாலசுந்தரனினால் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
  • எதிர்வரும் வாரங்களில் நல்லூர் கந்தசாமி ஆலயம், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம் போன்ற பிரபலமான ஆலயங்களின் உற்சவம் ஆரம்பிக்கப்படும் நிலையில் வெளிநாட்டில் வசிப்போர் பெருமளவில் இங்கு வர இருக்கின்றனர்.
  • இது தொடர்பான விபரங்கள் ஆவணி 20 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

சிவபாலசுந்தரனினால்  முக்கிய அறிவிப்பொன்று  வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் நேற்று (28) விசேட ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

அந்த அறிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உணவுச்சாலைகள், சிற்றுண்டி சாலைகள், வெதுப்பக விற்பனைகள் போன்றவற்றினை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், யாழ்ப்பாண வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், யாழ்ப்பாண சுற்றுலாதுறை அமைப்பின் பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர், பிரதேச சபை நகர சபை செயலாளர்கள், உணவுச்சாலை நடத்துபவர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்கள் , மாவட்ட உதவிச் செயலாளர் , பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடனும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியினால் 1980 ஆம் ஆண்டில் 26 ஆம் இலக்க உணவுச் சட்டம் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன் உணவு விற்பனை நிலையங்களில் காணப்படும் சுகாதாரம், உணவின் தரம், அளவு, உணவு விற்பனை நிலையங்களில் உணவை கையாளுபவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் உணவுச்சாலைகளுக்கான பதிவு, தரப்படுத்தல், குறித்த சட்டத்திற்கு கீழான ஒழுங்கு விதிகளும் தண்டனைகளும் போன்ற பல்வேறு விடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டன.

மேலும், இக்கலந்துரையாடலில் வெதுப்பக உற்பத்திகளின் நிறை, நிர்ணயிக்கப்படும் விலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நடமாடும் வெறுப்பக விற்பனை நிலையங்களில் உள்ள சுகாதார குறைபாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

பெரும்பாலான யாழ்ப்பாண நகர உணவுச்சாலைகள் உரிய தரங்களை கொண்டிருக்கவில்லை என்பதுடன், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதியளவு காய்கறி உற்பத்தி செய்யப்படுவதுடன் அவை வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் இங்குள்ள உணவு நிலையங்களில் இத்தகைய மரக்கறி வகைகளை பயன்படுத்தப்படாமலும் சோயாமீற், கடலை, பூசணி போன்றவற்றையே கறிகளாக பயன்படுத்துவதாகவும் நுகர்வோர் மத்தியில் அதிருப்தியான நிலை காணப்படுவதாகவும் அரசாங்க அதிபரால் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் உணவுச்சாலைகளில் கடமையாற்றுவர்களுடைய பொதுமக்கள் தொடர்பாடல், உடை அமைப்பு, உணவுச் சாலைகளுக்கான இட வசதி போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களால் விவாதிக்கப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் நல்லூர் கந்தசாமி ஆலயம், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம் போன்ற பிரபலமான ஆலயங்களின் உற்சவம் ஆரம்பிக்கப்படும் நிலையில் வெளிநாட்டில் வசிப்போர் பெருமளவில் இங்கு வர இருக்கின்றனர்.

மேற்படி உணவுச் சாலைகள், விடுதிகள், வெதுப்பகங்கள் பொது மக்களின் நன்மை கருதி உரிய தரங்களை பேணுவதுடன் சுகாதாரத் துறையினரால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் மாற்றங்களையும் திருத்தங்களையும் மேற்கொண்டு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை தங்கள் ஸ்தாபனங்களுக்கு சேவைக்கு அமர்த்துதல் வேண்டுமென உணவுச் சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் அளவு, நிறை என்பவற்றுக்கமைய விலைகள் தீர்மானிக்கப்பட்டு காட்சிப்படுத்தல் வேண்டும்.

இதற்காக உணவுச்சாலை உரிமையாளர்கள் தமக்குள் ஓர் அமைப்பினை உருவாக்கி மேற்படி அளவு, நிறை என்பவற்றுக்கேற்ப பொதுவான விலையினை தீர்மானத்து எதிர்வரும் ஆவணி 20 ஆம் திகதிக்கு முன்னதாக அதனை மாவட்ட செயலகத்திற்கு அவ்விபரத்தினை பொதுமக்களுக்கு வகையில் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த மாவட்ட அறியத்தருவதுடன் தெரியப்படுத்தும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வெதுப்பக உற்பத்திகளுக்குரிய விலைகளும் உற்பத்தியின் அளவு, நிறை என்பவற்றிற்கேற்ப வெதுப்பக உரிமையாளர் சங்கங்களால் நிர்ணயிக்கப்பட்டு அவை பகிரங்கப்படுத்தப்படுவதோடு விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விபரங்கள் ஆவணி 20 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் பல நகரங்களிலும் குறிப்பிடத்தக்க உணவுச்சாலைகள் உற்பத்தி மற்றும் சேவை வழங்கயில் உயர்தரத்தை பேணி அவற்றுக்குரிய சான்றிதழை சுகாதாரப் பிரிவினரிடம் பெற்றுக் கொண்ட போதிலும், பெரும்பாலான கடைகள் புதிய தரத்துக்கு அமைவாக வேண்டியதை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண வணிகர் அணுசரனையுடன் பிரதேச செயலக ரீதியாக சிறந்த தரத்தை பேணும் உணவுச் சாலைகளை கௌரவித்து சிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்வுகளும் தீர்மானிக்கப்பட்டது - என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...