Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார்

T

The Leader Desk

ஜூலை 28, 2023 • 3:46 PM

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும், அஸ்வெசும வரிசையிலும் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்த முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், ஆட்சியே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாகவும், பலவீனமான ஆட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • இவ்வாறான நிலையில் மக்கள் இருக்கும் அவல நிலையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் புதிய ஆணைக்கு செல்ல வேண்டும் என்றும், அப்புதிய மக்கள் ஆணைக்குள் புதிய தேசிய கொள்கையின் மூலம் நாட்டின் இலக்குகளை அடைய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (28) தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும், அஸ்வெசும வரிசையிலும் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்த முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், ஆட்சியே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாகவும், பலவீனமான ஆட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் மக்கள் இருக்கும் அவல நிலையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் புதிய ஆணைக்கு செல்ல வேண்டும் என்றும், அப்புதிய மக்கள் ஆணைக்குள் புதிய தேசிய கொள்கையின் மூலம் நாட்டின் இலக்குகளை அடைய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (28) தெரிவித்தார்.

எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும், மக்களின் கோரிக்கையான தேர்தல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் ஆணை எல்லாவற்றையும் விட முக்கியமானது என்றும், அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும் என்றும், மக்கள் ஆணை எனும் மக்களினது நீதிமன்றத்திற்குச் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...