Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு! நீதிமன்றத்தின் அறிவிப்பில் அதிர்ந்த கணவர்

T

The Leader Desk

பிப்ரவரி 11, 2022 • 9:55 AM

கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு! நீதிமன்றத்தின் அறிவிப்பில் அதிர்ந்த கணவர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் 20 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுடன் தப்பிச் சென்றுவிட்டதாக கணவர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • பவுன் தங்கம் மற்றும் 140 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்துடன் தனது மனைவி பிள்ளைகள் இருவருடன் தப்பி சென்றுள்ளதாக முல்லைரியா பிரதேசத்தை சேர்ந்த பிரபல சோதிடர் முறையிட்டுள்ளார்.
  • முறைப்பாட்டிற்கமைய, இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளை அவரது மனைவி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் 20 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுடன் தப்பிச் சென்றுவிட்டதாக கணவர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுகுறித்து விசாரணை செய்து, முல்லேரியா பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதனை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

47 பவுன் தங்கம் மற்றும் 140 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்துடன் தனது மனைவி பிள்ளைகள் இருவருடன் தப்பி சென்றுள்ளதாக முல்லைரியா பிரதேசத்தை சேர்ந்த பிரபல சோதிடர் முறையிட்டுள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய, இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளை அவரது மனைவி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பொருட்களை கொள்ளையடித்த மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக நீதிமன்றத்திற்கு கணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இதனால் அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இவற்றை ஆராய்ந்த நீதிமன்றம், சட்டப்பூர்வமான மனைவிக்கு, குழந்தைகளையும் சொத்துக்களையும் எடுத்துச் செல்ல உரிமை உண்டு எனவும், அதன் விளைவாக அவர் வெளிநாடு செல்வதைத் தடை செய்ய சட்டப்பூர்வ ஆதாரம் இல்லை எனவும், கூறிய நீதவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...