Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நாட்டை மீட்டெக்க வேண்டும்! அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை

T

The Leader Desk

பிப்ரவரி 11, 2022 • 3:00 AM

நாட்டை மீட்டெக்க வேண்டும்! அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பொதுக்கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் நேற்று (10) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பில் 148 ஆம் இலக்க உறுப்புரிமையில் இந்த பாராளுமன்றத்திற்கே அரச நிதி நிர்வாக அதிகாரம் உள்ளது.
  • அவை தனியாகவே வழங்க வேண்டும்.
எழுத்து அளவு:

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பொதுக்கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் நேற்று (10) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பில் 148 ஆம் இலக்க உறுப்புரிமையில் இந்த பாராளுமன்றத்திற்கே அரச நிதி நிர்வாக அதிகாரம் உள்ளது.

இதன்படி அரச நிதிகள் தொடர்பான தெரிவுக்குழுவில், சகல மாதங்களிலும் பாராளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் அரச கடன் தொடர்பிலும் கடன் சேவைகள் தொடர்பிலும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்கின்றேன்.

அத்துடன் அரசாங்கத்தின் நாணய இருப்பு தொடர்பிலும் கூறப்பட வேண்டும்.

இந்நிலையில் தற்போது முன்வைக்கப்படும் நாணய இருப்புகள் தொடர்பான தகவல்களில் சீனா, இந்தியாவில் இருந்து கொடுக்கும் கடன்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவை தனியாகவே வழங்க வேண்டும். தற்போது ஒரு பில்லியன் டொலரை விடவும் குறைவான தொகையே தற்போது இருப்பில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு மாதமும் இது தொடர்பான தகவல்களை வழங்கினால் அரச நிதியின் நிலைத் தன்மையை பேணலாம்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியமும், இலங்கை அரசாங்கமும் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான அறிக்கையை இந்த சபையில் சமர்பிக்குமாறும் நாங்கள் கேட்கின்றோம் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாட்டை மீட்டெக்க வேண்டும்! அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை | Tamil Leader | We Lead the Nation