Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மக்களுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளோம் என்கிறார் பிரதமர் மஹிந்த

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2022 • 1:05 PM

மக்களுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளோம் என்கிறார் பிரதமர் மஹிந்த

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அநுராதபுரத்தில் தற்போது இடம்பெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
  • ஏன் என்றால் நாங்கள் விவசாய குடும்பத்தில் இருந்தே வந்தோம்.
  • நாட்டு மக்களை சிந்தித்து ஜனாதிபதியினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்க நேரிட்டது.
எழுத்து அளவு:

அநுராதபுரத்தில் தற்போது இடம்பெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களை சிந்தித்து ஜனாதிபதியினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்க நேரிட்டது. அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறித்து சிந்தித்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.

இரசாயன உரத்தை தடை செய்தோம். மக்களின் ஆரோக்கியதற்காக இந்த கடுமையான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார். நாங்கள் எடுத்து அனைத்து விடயங்களிலும் எங்களுக்கு எதிராக பல தரப்பினர் செயற்பட்டனர்.

சீனாவின் தடுப்பூசிக்கும் தவறான கருத்துக்களை வெளியிட்டார்கள். உலகின் சிறந்த தடுப்பூசி என கூறப்படும் பைசருக்கும் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள்.

இந்த நாட்டு விவசாயிகளின் பிரச்சினை என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஏன் என்றால் நாங்கள் விவசாய குடும்பத்தில் இருந்தே வந்தோம்.

நாங்களே நெல்லுக்கு அதிக கட்டணத்தை செலுத்தினோம். விவசாயிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்ட காலங்களும் இருந்தது. எனினும் நாங்கள் அதனையும் மாற்றியமைத்தோம்.

அடுத்த தேர்தல்கள் குறித்து செயற்பட்டிருந்தால் போரையேனும் வெற்றிக் கொண்டிருக்க முடியாது. இறக்குமதியை தடை செய்தோம். அதனால் எவ்வளவு பெரிய சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என எங்களுக்கு தெரியும்.

எனினும் நாங்கள் நாட்டிற்காகவே அனைத்தையும் செய்தோம். இன்று முதல் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை உங்களிடம் எடுத்து வருகின்றோம்.

முடிந்தால் எதிர்க்கட்சியை அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...