Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களின் உயிரிழப்பு அதிகம்!

T

The Leader Desk

பிப்ரவரி 3, 2022 • 3:22 AM

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களின் உயிரிழப்பு அதிகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தங்கள் தரப்பில் உயிரிழப்பு எதும் இல்லை என முதலில் தெரிவித்து வந்த சீனா பின்னர் 2021 பிப்ரவரி மாதம் கல்வான் மோதல் குறித்த தகவலை வெளியிட்டது.
  • அதில், கல்வான் மோதலில் 4 வீரர்கள் மரணமடைந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • இந்த புலனாய்வு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கல்வான் மோதலில் சீன வீரர்கள் அதிக உயிரிழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் கல்வான் மோதலில் சீன தரப்பில் மொத்தம் 41 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என ‘தி ஹலாக்சன்’ புலனாய்வு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

தங்கள் தரப்பில் உயிரிழப்பு எதும் இல்லை என முதலில் தெரிவித்து வந்த சீனா பின்னர் 2021 பிப்ரவரி மாதம் கல்வான் மோதல் குறித்த தகவலை வெளியிட்டது. அதில், கல்வான் மோதலில் 4 வீரர்கள் மரணமடைந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், சீனா தெரிவித்த தகவலில் சந்தேகம் உள்ளதாகவும், உண்மையான உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் எனவும் பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், கல்வான் மோதலில் சீனா வீரர்களின் உயிரிழப்பு அதிகம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் பிரபல புலனாய்வு செய்தி நிறுவனம் ’தி ஹலாக்சன்’ கல்வான் மோதல் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்லது.

இந்த புலனாய்வு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கல்வான் மோதலில் சீன வீரர்கள் அதிக உயிரிழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இந்திய வீரர்களுடனான மோதலின் போது சீன வீரர்கள் கடும் குளிர் நிறைந்த உறையும் நிலையில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிச்சென்றனர்.

அப்போது, பல சீன வீரர்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். 38 சீன வீரர்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம். ஆனால், ஒரே ஒரு வீரர் மட்டுமே ஆற்றை கடக்கும்போது உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இதன் மூலம் கல்வான் மோதலில் சீன தரப்பில் மொத்தம் 41 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என ‘தி ஹலாக்சன்’ புலனாய்வு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களின் உயிரிழப்பு அதிகம்! | Tamil Leader | We Lead the Nation