Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வேனில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : சாவகச்சேரியில் சம்பவம்

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2022 • 2:29 AM

வேனில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : சாவகச்சேரியில் சம்பவம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளரை இடைமறுத்த குழுவினர், தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
  • சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • வவுனியா அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு சாவகச்சேரியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை, வவுனியாவில் ஊடகவியலாளர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நேற்று 31ஆம் திகதி நடந்துள்ளது.
எழுத்து அளவு:

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளரை இடைமறுத்த குழுவினர், தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக்காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
.
பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லுகள் மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறித் தப்பித்துச் சென்றதாக ஊடகவியலாளர் சுபேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் அண்மையில் இரண்டு ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளானமையும் நினைவூட்டத்தக்கது.

வவுனியா அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு

சாவகச்சேரியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை, வவுனியாவில் ஊடகவியலாளர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நேற்று 31ஆம் திகதி நடந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்குக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், அதன் பின் உள்ளே செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வேனில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : சாவகச்சேரியில் சம்பவம் | Tamil Leader | We Lead the Nation