Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஜே.வி.பி மீது மொட்டுக் கட்சி சகாக்கள் முட்டைத்தாக்குதல்!

T

The Leader Desk

ஜனவரி 31, 2022 • 2:15 AM

ஜே.வி.பி மீது மொட்டுக் கட்சி சகாக்கள் முட்டைத்தாக்குதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாக்குதல் நடத்திய குண்டர்களை அங்கு கூடியிருந்தவர்கள் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் 5000 ரூபா பணம் கொடுத்து தாங்களை அங்கு அழைத்துவந்ததாகவும் அந்தக் குண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
  • ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 5000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இதற்கு முன்னர் கொழும்பு கோட்டையில் ஜே.வி.பி.யின் ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியவர் தாம் எனவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
  • பிடிக்கப்பட்ட இருவரும் நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
  • https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe.
எழுத்து அளவு:

தாக்குதல் நடத்திய குண்டர்களை அங்கு கூடியிருந்தவர்கள் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் 5000 ரூபா பணம் கொடுத்து தாங்களை அங்கு அழைத்துவந்ததாகவும் அந்தக் குண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிப்பட்ட இருவரையும் விசாரித்த பின்னர், அவர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். முட்டைகளை வீசியதையும், யார் வீசச் சொன்னார்கள் என்பதையும் அவர்கள் இருவரும் ஏற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டின் மீது முட்டை தாக்குதல் நடத்துவதற்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த குழுவை அனுப்பப்பட்டதாகவும், இவர்கள் சர்ச்சைக்குரிய தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 5000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இதற்கு முன்னர் கொழும்பு கோட்டையில் ஜே.வி.பி.யின் ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியவர் தாம் எனவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போது மக்கள் தேசிய மக்கள் சக்தி குறுித்து பேச ஆரம்பித்துள்ள நிலையில், அவர்களின் மாநாட்டைக் குழப்புவதற்கு இந்த முட்டைத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிடிக்கப்பட்ட இருவரும் நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முதலில் நிட்டம்புவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் கம்பஹா மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க தொலைபேசியில் செய்த முறைப்பாட்டையடுத்து நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான ASP பிரபாத் விதான சந்தேக நபர்களை கைது செய்ய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gampaha 2022.01.30 3

Gampaha 2022.01.30 4

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...