Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பொதுமக்கள் எங்கள் அறிக்கைகளை அவதானித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்! சுகாஷ்

T

The Leader Desk

ஜனவரி 27, 2022 • 5:15 PM

பொதுமக்கள் எங்கள் அறிக்கைகளை அவதானித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்! சுகாஷ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
  • ஆகவே திட்டமிட்ட வகையில் எமது போராட்டம் இடம்பெறும்.
  • எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் குறைந்தபட்சம் 2 மணி வரையாவது உங்கள் வியாபார வர்த்தக செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி எங்களது பேரணிக்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்.
  • அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி காலை 9.30மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டும் என்றார்.
எழுத்து அளவு:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் திரட்சியையும் பேரணியையும் குழப்புவதற்காக பொய்ப் பிரசாரங்கள் நன்கு கச்சிதமாக திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றது.

நேற்றையதினம் இந்த ஊடக சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் பல்வேறுபட்ட சதி முயற்சிகள், இடம்பெறுவதாக நம்பகரமாக நாம் அறிகின்றோம்.

ஆகவே பொதுமக்கள் எங்கள் அறிக்கைகளை அவதானித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். போலிப் பிரசாரங்களை கருத்தில் எடுக்க கூடாது. இந்த விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.பேரணி கைவிடப்பட்டதாக கூட பொய்யான செய்திகள் பரப்பபடலாம். ஆகவே திட்டமிட்ட வகையில் எமது போராட்டம் இடம்பெறும்.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் குறைந்தபட்சம் 2 மணி

வரையாவது உங்கள் வியாபார வர்த்தக செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி எங்களது பேரணிக்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்.

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி காலை 9.30மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...