Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் கொவிட்! மீண்டும் முடக்கமா?

T

The Leader Desk

ஜனவரி 27, 2022 • 8:51 AM

தொடர்ந்து அதிகரிக்கும் கொவிட்! மீண்டும் முடக்கமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும், கொவிட் தொற்றாளர்களினால் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாக தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
  • எவ்வாறாயினும், கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அவதானமாக நடந்துகொள்ளாத பட்சத்தில் மீண்டும் முடக்கம் வருவதைத் தவிர்க்க முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe.
எழுத்து அளவு:


எனினும், கொவிட் தொற்றாளர்களினால் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாக தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இந்த சுய விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் வெளிமாவட்ட தொழிலாளர்களை ஊர்களுக்கு திரும்பி அனுப்புமாறு நிர்வாகத்திற்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு பிரதேசத்தில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தனிபட்ட நிகழ்வுகள், வைபவங்கள் இரத்துச் செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அவதானமாக நடந்துகொள்ளாத பட்சத்தில் மீண்டும் முடக்கம் வருவதைத் தவிர்க்க முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...