Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஈழத்து வீராங்கனைக்கு அடங்காமை குழுவின் சன்மானம்!

T

The Leader Desk

ஜனவரி 27, 2022 • 7:51 AM

ஈழத்து வீராங்கனைக்கு அடங்காமை குழுவின் சன்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • இம்மாதம் ( ஜனவரி 28ம் திகதி ) இலங்கை திரையரங்குகளில் வெளியாகும் தென்னிந்திய முழுநீளத்திரைப்படம் அடங்காமை.
  • ம் திகதி திரைப்படம் வெளியாகும் நிலையில் இந்த சாதனைப்பெண்ணுக்கு திரைக்குழுமம் சார்பாக ( வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பளர்கள் ) ரூபா ஒரு லட்சம் (100,000 ) கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கின்றனர்.
  • பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், 25வயதுக்குட்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ள எங்கள் வீரமங்கை கணேஷ் இந்துகாதேவிக்கு அடங்காமை திரைப்படகுழு சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எழுத்து அளவு:

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பின்தங்கி வரும் நிலை என்பதை முறியடித்த பெண்கள் வரிசையில் இன்று இந்துகாதேவியின் சாதனை மிகப்பெரியது.

இம்மாதம் ( ஜனவரி 28ம் திகதி ) இலங்கை திரையரங்குகளில் வெளியாகும் தென்னிந்திய முழுநீளத்திரைப்படம் அடங்காமை. இத்திரைப்படத்தின் ( வோர்ஸ் பிக்சர்ஸ் ) தயாரிப்பாளர்கள் பொன்புலேந்திரன், மைக்கேல் ஜான்சன் கதாநாயகன் சரோன் ஆகியோர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

28ம் திகதி திரைப்படம் வெளியாகும் நிலையில் இந்த சாதனைப்பெண்ணுக்கு திரைக்குழுமம் சார்பாக ( வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பளர்கள் ) ரூபா ஒரு லட்சம் (100,000 ) கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கின்றனர். அதுமட்டுமன்றி அவரது உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான தொடர் முயற்சிகளுக்கும் தங்கள் உதவிகளை தொடர்வோம் என கூறியிருக்கின்றனர்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது திறமைமீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி இன்று இச்சாதனையை படைத்து நாட்டுக்கும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், 25வயதுக்குட்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ள எங்கள் வீரமங்கை கணேஷ் இந்துகாதேவிக்கு அடங்காமை திரைப்படகுழு சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

என திரைக்குழு உறுப்பினர்களும் , கதாநாயகன் சரோனும் இந்துகாதேவியின் இல்லத்திற்கு சென்று வாழ்த்தி விடைபெற்றிருக்கன்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...