Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்தின் கீழ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது

T

The Leader Desk

ஜனவரி 27, 2022 • 2:32 AM

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்தின் கீழ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த விடயம் குறித்து மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தனது கருத்தை இவ்வாறு முன்வைத்தார்.
  • ஒரே நாடு ஒரே சட்டம் என்று அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை அவர்களால் முறையாக செயல்படுத்த முடியுமா?
  • தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங் மூலம் இணையுங்கள் https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe.
எழுத்து அளவு:

இந்த விடயம் குறித்து மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தனது கருத்தை இவ்வாறு முன்வைத்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு இல்லாமல் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால்  சட்டம் முறையானதாக  இருக்க வேண்டும்  மாறாக புதிதாக  நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் பின்னரே நாட்டில் சட்டமீறல் அதிகரித்து வருகின்றது அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சந்தேகமும் எழுகின்றது .


அனைத்து தேசிய இனத்தவர்களையும் 'ஒரே நாடு ஒரே சட்டம்' எந்தவொரு பாகுபாடுமின்றி பார்க்கின்றதா?  

ஏற்கனவே நாட்டில் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது புதிதாக கொண்டுவரப்பட்ட  'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற இந்த சட்டத்தின் கீழ்  நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடுவதைக் காண்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தின்  செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால் அவர்களால் எந்தவிதமான நீதியும் கிடைக்காது என்பதை எவராலும் தெரிந்து  கொள்ள முடியும். வர்த்தமானிகள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை அவர்களால் முறையாக செயல்படுத்த முடியுமா?

ஒரு நாடு ஒரு சட்டம் என்று அவர்கள் கூறினாலும்  பௌத்தர்களுக்கும்  இந்துக்களுக்கும் இஸ்லாமிர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த நேரத்திலும் இந்த அரசாங்கம் நன்மை செய்வதையோ நீதி வழங்கப்படுவதையோ நாங்கள் காணவில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்

இந்த விடயம் குறித்து தங்கல்லை சாரத தேரர்  தனது கருத்தை இவ்வாரறான முறையில் முன்வைத்தார்.

'தற்போது 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற ஒரு விடயம் நாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது  ஒருபுறம் இது ஒரு நல்ல நடவடிக்கை என்று சிலர்  கருதலாம் ஆனால் இந்த செயலணியின் தலைவராகவோ அங்கத்தவர்களாகவோ நியமிக்கப்படுபவர்கள் சரியான முறையில் செயற்பட வேண்டும். ஆனால் அவர்களின் செயற்பாடுகளில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன.  

அவர்கள் மதகுருமார்களாக கூட   இருக்கலாம்.எப்பொழுதும் நாம் சரியாக இருக்கின்றோம்  என்ற எண்ணத்தில் சட்டத்தைப் பிரயோகிக்க நமக்கு உரிமை இல்லை. 'சப்பே சத்தா பவந்து சுகிதாத்தா' அதாவது 'எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென புத்த பெருமான் போதனை செய்துள்ளார்.

மேலும் அண்டை வீட்டாரையும் அனைத்து உயிரினங்களையும் நேசிக்க வேண்டுமென இயேசு அறிவித்தார்.அனைத்து மதங்களும் அன்பு பாசம் மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டவை.அப்படியானால் நாம் செய்ய வேண்டியது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளின் தற்போதைய மாற்றங்கள் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங் மூலம் இணையுங்கள்

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்தின் கீழ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது | Tamil Leader | We Lead the Nation