Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்தாவிட்டால் இரணைமடு குளத்துக்கு ஆபத்து ஏற்படும்!

T

The Leader Desk

ஜனவரி 26, 2022 • 9:13 AM

மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்தாவிட்டால் இரணைமடு குளத்துக்கு ஆபத்து ஏற்படும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்ட அரச அதிபர் தலைமையில், மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று முன்தினம் (24) பிற்பகல் நடைபெற்றது.
  • இதனால் எதிர்காலத்தில் பெரியதொரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது.
  • அந்த அடிப்படையிலேயே, குறிப்பாக முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து அதன்மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
எழுத்து அளவு:

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்ட அரச அதிபர் தலைமையில், மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று முன்தினம் (24) பிற்பகல் நடைபெற்றது.

இதில் கருத்துரையாற்றிற அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரிகளாகிய நாங்கள் சில வருடங்களே இங்கு கடமையில் இருப்போம். ஆனால், இங்குள்ள சமூகமும் மக்களும் இப்பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றார்கள்.

“சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். குறிப்பாக, இரணைமடு குளத்தின் கீழ் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் பெரியதொரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது. இதனால் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும்.

“எனவே, சமூகத்தினுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக மிக அவசியமானது. அந்த அடிப்படையிலேயே, குறிப்பாக முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து அதன்மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

“அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன இடங்களை அடையாளப்படுத்தி, காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும்”  என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...