Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மஹிந்தவின் பணத்தை கொள்யையடித்தது யார்? கசிந்தது தகவல்!

T

The Leader Desk

ஜனவரி 26, 2022 • 4:10 AM

மஹிந்தவின் பணத்தை கொள்யையடித்தது யார்? கசிந்தது தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாகக் கூறப்படும் பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
  • மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாகக் கூறப்படும் பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த வங்கிக் கணக்கில் பணம் குறைந்துள்ளமை தொடர்பில் தேடிப் பார்த்த போதே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மகனான மஹிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான, சில காலம் அவரது தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்டவர் எனவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், பண மோசடி தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த நபர் , பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...