Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மோடி அழைப்பு!

T

The Leader Desk

ஜனவரி 26, 2022 • 1:30 AM

அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மோடி அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியாவில் தேர்தல் கமிஷன் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த நாள், 2011-ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த கலந்துரையாடலின்போது, அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:- 1950-ம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்தி அதன் கண்ணியத்தை தேர்தல் கமிஷன் அதிகரித்து வருகிறது.
  • ம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவிலேதான் வாக்குப்பதிவு சதவீதம் இருந்தது.
எழுத்து அளவு:

இந்தியாவில் தேர்தல் கமிஷன் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள், 2011-ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நேற்று இந்த நாளையொட்டி பிரதமர் மோடி, குஜராத் மாநில பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாட ஏற்பாடானது. பின்னர் இது நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களும் கலந்துகொள்ளத்தக்க விதத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலின்போது, அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

1950-ம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்தி அதன் கண்ணியத்தை தேர்தல் கமிஷன் அதிகரித்து வருகிறது.

தேர்தல் கமிஷனுக்கு, அதிகாரிகளை இட மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை.

1951-52-ம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவிலேதான் வாக்குப்பதிவு சதவீதம் இருந்தது. தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் இது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெண்கள் வாக்களிப்பது அதிகரித்து இருப்பது நல்ல விஷயம். ஆனால் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையில் அனைவரும் குறைவான வாக்குப்பதிவு பற்றி சிந்திக்க வேண்டும்.

கல்வி அறிவு மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகிற நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஓட்டு போடத்தான் வருவதில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவை பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பிற கள பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்குப்பதிவு மிகவும் புனிதமான நன்கொடை ஆகும். வாக்காளர்கள் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல் என்பது பற்றிய விவாதத்திற்கு அழுத்தம் தர வேண்டும். வெவ்வேறு கருத்துகள் வெளியே வரட்டும்.

அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. ஆட்சிக்கு வருவதற்காக மட்டும் தேர்தலில் போட்டியிடமாமல் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று  கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மோடி அழைப்பு! | Tamil Leader | We Lead the Nation