Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்க: மேற்குலத்தை நாடும் தமிழ்க் கட்சிகள்

T

The Leader Desk

ஜனவரி 25, 2022 • 5:45 AM

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்க: மேற்குலத்தை நாடும் தமிழ்க் கட்சிகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துடன், இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி, தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்குமாறு கோரி கடந்த 18ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது.
  • மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்துள்ளன.
  • அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை வலியுறுத்தி தமிழ் மக்களை நசுக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

அத்துடன், இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி, தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்குமாறு கோரி கடந்த 18ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைக் கழகம் [TELO], தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு [புளொட்] இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி [ITAK], தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு [TPNA], ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF] மற்றும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு [TNP] இந்த பொது ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆகியன இணைந்து இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் பேசும் அனைத்துக் கட்சிகளுடனும் பொதுவான ஆவணமொன்றைத் தயாரிப்பதற்காகப் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தின.

கூட்டாட்சி முன்மொழிவுகள், வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த ஆவணத்தில் சில கட்சிகள் கையெழுத்திட மறுத்துள்ளன.

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்துள்ளன.

பொது ஆவணத்தில் கையொப்பமிடாத போதிலும், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை வலியுறுத்தி தமிழ் மக்களை நசுக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...