Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

முல்லைத்தீவில் மற்றுமொரு முற்கம்பித் தாக்குதல் : இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஜனவரி 25, 2022 • 5:32 AM

முல்லைத்தீவில் மற்றுமொரு முற்கம்பித் தாக்குதல் : இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த தாக்குதலில் 41 வயதான டிப்பர் சாரதியொருவரான நவரத்தினம் உதயசீலன் என்பவர் காயமடைந்து, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
  • இந்தச் சம்பவம் குறித்து டிப்பர் சாரதி செய்தியாளர்களிடம் கூறியபோது, ''ஜனவரி 24 திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் கைவேலி பகுதியில் சிவில் உடையில் இருந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள், டிப்பர் வாகனத்தை நிறுத்தினர்.
  • அதன்பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தபோது தாக்கப்பட்டேன்'' என்று குறிப்பிட்டார்.
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 68 ஆவது படைப் பிரிவின் 682 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தில் வாகனம் காலியாக இருந்ததாக சாரதி அதிகாரிகளிடம் நம்புவதாகக் கூறியிருந்தார்.
எழுத்து அளவு:

இந்த தாக்குதலில் 41 வயதான டிப்பர் சாரதியொருவரான நவரத்தினம் உதயசீலன் என்பவர் காயமடைந்து, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து டிப்பர் சாரதி செய்தியாளர்களிடம் கூறியபோது,
''ஜனவரி 24 திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் கைவேலி பகுதியில் சிவில் உடையில் இருந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள், டிப்பர் வாகனத்தை நிறுத்தினர். அத்துடன் வாகனத்தில் என்ன இருக்கிறது என்று கேள்வியெழுப்பினர். வாகனத்தில் ஒன்றும் இல்லை என்று பதிலளித்தேன். அதன்பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தபோது தாக்கப்பட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

தான் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தபோது, குறைந்தது இருவர் மீது மது வாசனை வீசியதாக உதயசீலன் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 68 ஆவது படைப் பிரிவின் 682 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தில் வாகனம் காலியாக இருந்ததாக சாரதி அதிகாரிகளிடம் நம்புவதாகக் கூறியிருந்தார்.

பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்ட தினத்தில், உதயசீலனின் உறவினர் மற்றும் நண்பர்களைத் தொடர்புகொண்டுள்ள இராணுவ அதிகாரிகள், முறைப்பாட்டை மீளப் பெற்று சமாதானம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளதாக உதயசீலன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் முள்கம்பியால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...