Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தமிழக மீனவர்களின் படகுகள் ஏல விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்க! செந்தில் தொண்டமான்

T

The Leader Desk

ஜனவரி 25, 2022 • 4:57 AM

தமிழக மீனவர்களின் படகுகள் ஏல விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்க! செந்தில் தொண்டமான்    

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறைந்த அளவு கடற்பரப்பு இருப்பதனால் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவது முற்றிலும் அறியா செயலாகும்.
  • மீனவர்களின் பிரச்சினைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் ஊடாகவே சுமூகமான தீர்வினை எட்ட முடியும்.
  • அவர்கள் மீன்பிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே கடற்பரப்புக்குள் வருகின்றனர்.
எழுத்து அளவு:

அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறைந்த அளவு கடற்பரப்பு இருப்பதனால் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவது முற்றிலும் அறியா செயலாகும். அவர்கள் மீன்பிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே கடற்பரப்புக்குள் வருகின்றனர். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் இந்த விடயத்தை கடற்றொழில் அமைச்சு மறுப்பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில் இரு நாட்டின் மீனவ சமூகத்தினருக்கும் இடையில் நட்புறவு வலுப்படும்.

மீனவர்களின் பிரச்சினைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் ஊடாகவே சுமூகமான தீர்வினை எட்ட முடியும். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதால், மீனவர்கள் படகின்றி தொழிலுக்கு செல்ல முடியாமல் பாரிய பொருளாதார சிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடும் பொழுது மீனவ சமூகத்தினர் மேலும் வாழ்வாதார நெருக்கடிக்குள் தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது. பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் மீனவ சமூகத்திற்கு இந்நடவடிக்கை ஒரு முட்டுக்கட்டையாக அமையும்.

எனவே இவ்விடயத்தை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும் என கடற்றொழில் அமைச்சிக்கு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழக மீனவர்களின் படகுகள் ஏல விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்க! செந்தில் தொண்டமான் | Tamil Leader | We Lead the Nation