Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தொற்றுநோயால் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயாளர்கள்!

T

The Leader Desk

ஜனவரி 23, 2022 • 4:22 PM

தொற்றுநோயால் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயாளர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்காவில் கொடிய தொற்றுநோயால் உயிரிழந்தவர்களில் 52%ற்கும் அதிகமான மக்கள் நீரழிவு நோயாளிகள் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.
  • ஏனைய நாடுகளின் புள்ளிவிவரங்களுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்ட இறப்புகளில் 84 வீதம் நீரிழிவு மற்றும் பிற தொற்றாத நோய்களால் ஏற்படுவதாக தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
  • ஸ்ரீலங்கா சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் கொவிட் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் வைத்தியர் மணில்க சுமணதிலக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஸ்ரீலங்காவில்  கொடிய தொற்றுநோயால் உயிரிழந்தவர்களில் 52%ற்கும் அதிகமான மக்கள் நீரழிவு நோயாளிகள் என

இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் கொவிட் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் வைத்தியர் மணில்க சுமணதிலக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த நோயும் இல்லாதவர்களை விட இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது அநேகமாக முன்கணிப்பை விட பத்து மடங்கு அதிகம் என விசேட வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய நாடுகளின் புள்ளிவிவரங்களுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்ட இறப்புகளில் 84 வீதம் நீரிழிவு மற்றும் பிற தொற்றாத நோய்களால் ஏற்படுவதாக தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனவே ஸ்ரீலங்காவில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற தொற்றாத நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளிகளின் உடலுக்குள் வைரஸ் நுழைந்தவுடன் மூச்சுக்குழாய், கணையம்,  இதயம் உட்பட ஏனைய உறுப்புகளுக்குள் ஏனையவர்களின் உடலை விட வேகமாக நுழைகிறது.

அவர்களுக்கு நோயினால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், வழக்கமான சுவாசக் கோளாறுகள் தவிர திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் அவர்கள் இறக்க நேரிடும் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் வைத்தியர் மணில்க சுமணதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...