Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பேச்சுவார்த்தைகள் ஊடாக மக்களின் கனிசமான பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்! இரா.துரைரெட்னம்

T

The Leader Desk

ஜனவரி 22, 2022 • 7:33 AM

பேச்சுவார்த்தைகள் ஊடாக மக்களின் கனிசமான பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்!  இரா.துரைரெட்னம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் இன்று (22) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.
  • அதில் நம்பிக்கை கொண்டு பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
  • இதன்போது மேலும் தெரிவித்ததாவது, புதுவருட நாடாளுமன்ற உரையின்போது வடகிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை பேசவருமாறு அழைப்பு விடுத்துள்ளமையை வடகிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் தலைமைகள் ஏன் சாதகமாக பார்த்து விடக்கூடாது என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
எழுத்து அளவு:

இது தொடர்பில் இன்று (22) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

புதுவருட நாடாளுமன்ற உரையின்போது வடகிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை பேசவருமாறு அழைப்பு விடுத்துள்ளமையை வடகிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் தலைமைகள் ஏன் சாதகமாக பார்த்து விடக்கூடாது என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

ஜனாதிபதியின் அரசியல் பரவலாக்கல், அரசியல் ரீதியான தீர்வுதிட்டம, ஒரு பக்க பௌத்த மேலாதிக்க செயற்பாடு, காணாமல் போனவர்களின் பிரச்சினை, கடந்த காலத்தில் அவரின் செயலாளராக இருந்த காலத்தில் நடைபெற்ற தமிழின படுகொலைகள் என பல குற்றச்சாட்டுகளை தமிழ் மக்கள் அவர் மீது முன்வைத்த நிலையில்,

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் இலங்கைக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற வகையிலும் தமிழர்களுக்கான ஒரு அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையிலும் தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களை பேசுவதில் எந்த தவறும் இல்லை.

தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்படாத நிலையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன. அந்த சூழ்நிலைகளை தமிழ் தலைமைகள் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

வடகிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் தேசியத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடனேயே மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக்கூடாது.

இந்தவகையில் நாங்கள் நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை தமிழ் தலைமைகள் பேசியேயாக வேண்டும். அந்த பேச்சுவார்த்தை ஊடாக கணிசமான தீர்வினை எட்ட முடியும்.

அதில் நம்பிக்கை கொண்டு பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். இதேபோன்று ஜனாதிபதியினால் புலம்பெயர் மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை ஏதாவது தமிழ் மக்களுக்கு நன்மையினை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வெளிநாடுகளில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுவதில் எந்த தவறும் இல்லை.

இலங்கை ஜனாதிபதி இலங்கைக்குள் பிரச்சினையை தீர்க்க வேண்டும். சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கான தீர்வு, காணாமல்போனவர்களின் பிரச்சினையென தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து பேசவேண்டிய தேவை புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் உள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பினை புலம்பெயர் அமைப்புகள் சாதகமான பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தூதரகங்கள் ஊடாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பினை நாங்கள் தேவையற்ற ஒன்றாக கருதினாலும் அந்த அழைப்பினை புலம்பெயர் அமைப்புகள் சாதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.        

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...