Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நுசந்தாராவுக்கு மாறுகிறது!

T

The Leader Desk

ஜனவரி 21, 2022 • 4:21 AM

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நுசந்தாராவுக்கு மாறுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டின் பல தலைவர்கள் பல்லாண்டு காலமாக கூறி வந்த யோசனையின் செயல்வடிவம் இதுவாகும்.
  • புதிய தலைநகர் சட்டம், அதிபர் ஜோகோ விடோடோவின் லட்சியமான 32 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.40 லட்சம்கோடி) மெகா திட்டத்துக்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது.
  • இந்த நகரம் நாள்பட்ட நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
  • ஜகார்த்தாவில் இருந்து நுசந்தாராவுக்கு தலைநகர் மாற்றப்படும் என்று அதிபர் ஜோகோ விடோடோ 2019-ல் அறிவித்தார்.
எழுத்து அளவு:

நாட்டின் பல தலைவர்கள் பல்லாண்டு காலமாக கூறி வந்த யோசனையின் செயல்வடிவம் இதுவாகும். புதிய தலைநகர் சட்டம், அதிபர் ஜோகோ விடோடோவின் லட்சியமான 32 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.40 லட்சம்கோடி) மெகா திட்டத்துக்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. மேலும் தலைநகர் வளர்ச்சிக்கு நிதி அளித்து, நிர்வகிக்கப்படும் என்பதையும் குறிப்பிடுகிறது.

இந்த மசோதாவை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து திட்டத்துறை மந்திரி சுகர்சோ மொனோர்பா கூறும்போது, “புதிய தலைநகர் ஒரு மைய செயல்பாட்டைக் கொண்டிருக்கும். நாட்டின் அடையாளத்தின் சின்னமாகவும், பொருளாதார ஈர்ப்புக்கான புதிய மையமாகவும் இருக்கும்” என குறிப்பிட்டார்.

இந்தோனேசியா தலைநகரை மாற்றுவதற்கான முக்கிய காரணம், பருவநிலை மாற்றத்தால் ஜகார்த்தா வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டம் வகுக்கப்பட்டுளது. இந்த நகரம் நாள்பட்ட நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தலைநகரை நுசந்தாராவுக்கு மாற்றுவது தொடர்பாக பல கலந்தாய்வுகள் நடத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.

ஜகார்த்தாவில் இருந்து நுசந்தாராவுக்கு தலைநகர் மாற்றப்படும் என்று அதிபர் ஜோகோ விடோடோ 2019-ல் அறிவித்தார். ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த நடவடிக்கை தாமதமானது. தற்போது சூடுபிடித்துள்ளது. தலைநகரை மாற்றுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் 2022-2024-க்கு இடையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...