Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வணிகத்திற்காக சொத்துக்களை விற்கிறது!

T

The Leader Desk

ஜனவரி 21, 2022 • 3:59 AM

ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வணிகத்திற்காக சொத்துக்களை விற்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கமைய, திருகோணமலையில் குச்சவெளி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியில், முன்னர் ஜேர்மன் குரல் வானொலி இயங்கி வந்த இடத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
  • திருகோணமலை, குச்சிவெளியில் 250 ஹெக்டேர் நிலத்தை சூரிய சக்தி மின்னுற்பத்தி செய்ய பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். இந்த நிலம் 1980இல் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தப்பட்டது.
  • இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.
  • இதன் மூலம் 80 முதல் 100 மெகாவொட் திறன் கொண்ட சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
எழுத்து அளவு:

இதற்கமைய, திருகோணமலையில் குச்சவெளி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியில், முன்னர் ஜேர்மன் குரல் வானொலி இயங்கி வந்த இடத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

திருகோணமலை, குச்சிவெளியில் 250 ஹெக்டேர் நிலத்தை சூரிய சக்தி மின்னுற்பத்தி செய்ய பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.  இந்த நிலம் 1980இல் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தப்பட்டது. ஜேர்மன் குரல் வானொலியை இயக்கும் வாய்ப்பு ஜேர்மன் குடியரசுக்கு வழங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும் காணி வானொலி நிலையத்திற்கு மீளக் கொடுக்கப்பட்ட போதிலும், காணி இன்னும் வெறுமனே காணப்படுவதாக என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவை தீர்மானத்தின் போது அறிவித்துள்ளார்.

ஜனவரி 19 காலை கொழும்பில் உள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்துகொள்ளும் என தெரிவித்தார்.

“குச்சவெளி சூரிய சக்தி திட்டம் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை முதலீட்டாளர்கள் ஊடாக ஆரம்பிக்கப்படும்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

இதன் மூலம் 80 முதல் 100 மெகாவொட் திறன் கொண்ட சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

அரசியல் மயப்படுத்தல், தனியார் வானொலிச் சேவைகளின் ஆரம்பம், நிர்வாகக் குறைபாடுகள் போன்றவற்றால் நாளுக்கு நாள் நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆசியாவின் வானொலித் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட பிரித்தானியர்களால் 'ரேடியோ சிலோன்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

1953ஆம் ஆண்டு டென்சின் நோர்கேயுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நபராக வரலாற்றில் இடம்பிடித்த எட்மண்ட் ஹிலாரி மலை உச்சியில் கேட்கக்கூடிய ஒரே வானொலி நிலையமாக ரேடியோ சிலோன் பதிவாகியது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...