Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

புனித தலங்கள் தொடர்பாக பிரதமருக்கு இந்து பக்தர்களின் கோரிக்கை!

T

The Leader Desk

ஜனவரி 21, 2022 • 3:50 AM

புனித தலங்கள் தொடர்பாக பிரதமருக்கு இந்து பக்தர்களின் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கில் நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாரையை புனித ஸ்தலமாக பிரகடனப்படுத்தி அதற்கான சான்று பத்திரங்கள் எதிர்வரும் வெசாக் காலத்தில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அண்மையில் அறிவித்திருந்தது.
  • பௌத்த மதத்தைச் சேர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒவ்வொரு வருடமும் திருப்பதி இந்து கோவிலுக்கு சென்று வழிபடுபவராக இருப்பதால் அவர் சிறப்பாகச் செயற்படுவார் என குகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • இந்து மத அமைப்புகள் தமது அரசியல் நடவடிக்கைகளை புறந்தள்ளி இந்த பஞ்ச ஈஸ்வரங்களை புனித இடங்களாக அறிவிக்கும் வகையில், இந்து சமய விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் இணைந்து கோரிக்கை விடுக்க வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

மன்னாரில் உள்ள திருக்கேஸ்வரம்,  திருகோணமலை திருகோணேஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம், தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீசுவரம் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வர கோயில் வளாகத்தை தேசிய புனிதப் பிரதேசங்களாக அறிவிக்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ், இந்து சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாரையை புனித ஸ்தலமாக பிரகடனப்படுத்தி அதற்கான சான்று பத்திரங்கள் எதிர்வரும் வெசாக் காலத்தில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்து மத அமைப்புகள் தமது அரசியல் நடவடிக்கைகளை புறந்தள்ளி இந்த பஞ்ச ஈஸ்வரங்களை புனித இடங்களாக அறிவிக்கும் வகையில், இந்து சமய விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் இணைந்து கோரிக்கை விடுக்க வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒவ்வொரு வருடமும் திருப்பதி இந்து கோவிலுக்கு சென்று வழிபடுபவராக இருப்பதால் அவர் சிறப்பாகச் செயற்படுவார் என குகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1965ஆம் ஆண்டு முதல் மன்னார் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு இந்து புனித பூமியாக அறிவிக்குமாறு  அனைத்து அரசாங்கங்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த போதிலும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...