Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கணேஷ் இந்துகாதேவிக்கு சாணக்கியன் வாழ்த்து!

T

The Leader Desk

ஜனவரி 20, 2022 • 5:08 PM

கணேஷ் இந்துகாதேவிக்கு சாணக்கியன் வாழ்த்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (செவ்வாய்கிழமை) பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
  • அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கணேஷ் இந்துகாதேவி தந்தையினை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பிலேயே வசித்து வருகின்றார்.
  • இந்நிலையிலேயே அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும்நிலையில் குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.

(செவ்வாய்கிழமை) பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஷ் இந்துகாதேவி சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இவ்வாறான வெற்றிகளைக் குவித்து வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கணேஷ் இந்துகாதேவி தந்தையினை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பிலேயே வசித்து வருகின்றார். கணேஷ் இந்துகாதேவியின் வெற்றியில் அவரது தாயார் படும் துன்பங்கள் மறைந்து போயுள்ளன.

இப்படியானதொரு தங்க மகளை நாட்டிற்கு தந்த கணேஷ் இந்துகாதேவியின் தாயாருக்கு எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், கணேஷ் இந்துகாதேவி தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் வெற்றிகளைக் குவிக்க அனைத்து தரப்பினரும் அவருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...