Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கிளிநொச்சி பளை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

T

The Leader Desk

ஜனவரி 19, 2022 • 4:08 PM

கிளிநொச்சி பளை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள பளை பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்து வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதுடன் பௌதிக வளப் பற்றாக்குறையும் காணப்படுகின்றது.
  • எனவே வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்களும் பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
  • அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் இங்கு சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள பளை பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்து வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதுடன் பௌதிக வளப் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள்  இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறான நிலையில் இங்கு சிகிச்சை பெறச் செல்லும்  நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஏ-9வீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கான வைத்தியர்கள் ஏனைய ஆளனி வளங்கள்  பூர்த்தி செய்யப்படாமையினால்  பல்வேறு நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஏ- 09  நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலைகளின் ஒன்றாகக் காணப்படுகின்ற இவ்வைத்தியசாலை வசதி குறைபாடுகளுடன் காணப்படுவதனால் வீதி விபத்துகளில் காயமடைந்தவர்களை  பளை  வைத்தியசாலையிலிருந்து  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  அல்லது யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுகின்ற போது உயிரிழப்பு கூட ஏற்படும் அபாய நிலை காணப்படுகின்றது. எனவே வைத்தியசாலையின்  தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு  பிரதேச மக்களும் பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கட்டட வேலைகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் தளபாடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளும் குறைவாகவே காணப்படுகின்றன. பிரதேச வைத்தியசாலையானது ஒரு வைத்தியரை மாத்திரமே  கொண்டு இயங்கி வருவதாகவும்  மேலதிக வைத்தியரை நியமிக்குமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...