Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இந்தியாவை தலையிடுமாறு கோரி ஏழு தமிழ் கட்சிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளன!

T

The Leader Desk

ஜனவரி 18, 2022 • 4:41 PM

இந்தியாவை தலையிடுமாறு கோரி ஏழு தமிழ் கட்சிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.
  • இந்த ஆவணம் கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றமையின் காரணமாக குறித்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
  • ஏற்கனவே இந்த 7 பக்க ஆவணம் தொடர்பில் கசிந்த சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் தலைமையில், வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இதனை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இன்று கையளித்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இது தொடா்பான நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழமக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை, பொதுவான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்று கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆவணம் கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றமையின் காரணமாக குறித்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த 7 பக்க ஆவணம் தொடர்பில் கசிந்த சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில், இந்த ஆவணம் தொடர்பில் ஆரம்பத்தில் பேச்சுக்கள் நடந்தபோது, அதில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணியும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் பங்கேற்றன.

எனினும் அவை இந்த ஆவணத்தில் இறுதியில் கையெழுத்திடவில்லை. மாறாக தாம் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...