Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

திருடுவதில் இவர்களுக்கு எவ்வித பேதமும் இல்லை! சுனில் ஹந்துனெத்தி

T

The Leader Desk

ஜனவரி 18, 2022 • 4:06 AM

திருடுவதில் இவர்களுக்கு எவ்வித பேதமும் இல்லை! சுனில் ஹந்துனெத்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாத்தறையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • அவர் மேலும் கூறுகையில், கடந்த 73 ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கை கூட்டாக இணைந்து திருடுவது மட்டுமேயாகும்.
  • பிணைமுறி மோசடி விசாரணைகளின் போது ரணில் தரப்புக்கு முன்னர் ஆட்சி செய்த மஹிந்த தரப்பின் அஜித் நிவாட் கப்ரால் போன்றோர் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றன.
எழுத்து அளவு:

மாத்தறையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 73 ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கை கூட்டாக இணைந்து திருடுவது மட்டுமேயாகும். பிணை முறி மோசடிகள் தொடர்பில் நான் கோப் குழு ஊடாக விசாரணை செய்தேன்.

ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்தேன். இந்த விசாரணைகள் நடாத்தப்படும் போது இதனுடன் தொடர்புடையவர்கள் யார் தெரியுமா முன்னைய ஆட்சியாளர்கள்.

பிணைமுறி மோசடி விசாரணைகளின் போது ரணில் தரப்புக்கு முன்னர் ஆட்சி செய்த மஹிந்த தரப்பின் அஜித் நிவாட் கப்ரால் போன்றோர் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றன.

இவ்வாறு ஒரு பிரச்சினை பற்றி விசாரணை நடாத்தும் போது அதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் தவறுகள் அம்பலமாகின்றது.

அனைவரும் நல்ல நண்பர்கள், எந்த விடயத்தைப் பற்றி விசாரணை செய்தாலும் அனைவரும் அதில் தொடர்புப்பட்டிருக்கின்றனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவை கோடிக்கணக்கில் நட்டமடைந்திருந்தது. ஒரு தரப்பினர் எயார்பஸ்களை விற்பனை செய்துள்ளனர்.பின்னர் ஆட்சி செய்த ரணில் தரப்பினர் அதனை கொள்வனவு செய்து மோசடி செய்துள்ளனர்.

திருடுவதில் இவர்களுக்கு எவ்வித பேதமும் இல்லை, அதற்காக இவர்கள் பொதுக்கொள்கையொன்றை வகுத்துக் கொண்டுள்ளனர் என சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...