Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மக்கள் தற்போது வாழும் நிலைமையில் எதிர்காலத்தில் வாழ முடியாது! துமிந்த நாகமுவ

T

The Leader Desk

ஜனவரி 17, 2022 • 5:36 PM

மக்கள் தற்போது வாழும் நிலைமையில் எதிர்காலத்தில் வாழ முடியாது! துமிந்த நாகமுவ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
  • பாற்சோறு சாப்பிட்டு ஆட்சிக்கு கொண்டு வந்த இந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போது பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • சிகப்பு பச்சை அரிசியின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • இதனால், ஏப்ரல் மாதமளவில் இந்த விலைகள் 200, 250 ரூபாவாக அதிகரித்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.
எழுத்து அளவு:

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சில வேலை அந்த நிலைமை அடுத்த சில மாதங்களுக்குள் ஏற்படலாம் அல்லது அடுத்த வருடங்களுக்கு ஏற்படலாம். இது நீடிக்க போகும் பிரச்சினை. இதனால், மக்கள் தற்போது வாழும் நிலைமையில் எதிர்காலத்தில் வாழ முடியாது போகும் என எச்சரிக்கின்றோம்.

பாற்சோறு சாப்பிட்டு ஆட்சிக்கு கொண்டு வந்த இந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போது பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளது. சிகப்பு பச்சை அரிசியின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால், ஏப்ரல் மாதமளவில் இந்த விலைகள் 200, 250 ரூபாவாக அதிகரித்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

இதுதான் உண்மையான நிலவரம். அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமையில் நாட்டில் உணவு பற்றாக்குறை அல்லது பஞ்சம் ஏற்படலாம். அரிசியை இறக்குமதி செய்ய பணமில்லை.

அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் இறக்குமதி செய்வோம் என அரசாங்கம் கூறியது. ஏற்படப் போகும் நிலைமையை பார்த்தால் அந்நிய செலாவணி கையிருப்பில் எதுவும் மிஞ்சாது போகும்.

பசளையை இறக்குமதி செய்ய முடியாத அரசாங்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதளவில் அரிசியை இறக்குமதி செய்ய முடியாமல் போகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரும் போக அறுவடையில் அரிசி கிடைக்காது போனால், மக்கள் உண உணவின்றி, வாழைத்தண்டை சாப்பிடும் பொருளாதார நிலைமை உருவாகும்.

இதனால், தற்போதைய அரசாங்கத்துடன் இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தயாராகுமாறு மக்களிடம் கூறுகின்றோம். இந்த பிரச்சினை 2022 ஆம் ஆண்டுடன் முடியாது.

2023 ஆம் ஆண்டு நாம் நான்காயிரத்து 247.60 மில்லியன் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டில் செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடான தொகையை அடுத்த ஆண்டும் செலுத்த வேண்டும்.

அத்துடன் சர்வதேச பிணை முறிகளுக்காக இலங்கை ஆயிரத்து 250 மில்லியன் ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. அபிவிருத்தி பிணை முறிகளுக்கு 404.6 மில்லியனை செலுத்த வேண்டியுள்ளது.

இந்த அபிவிருத்தி பிணை முறிகளுக்கான வட்டியாக 391.76 மில்லியனை செலுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கூட்டினால், 6 ஆயிரத்து 293.36 மில்லியன் ரூபாய். இதனை காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரிக்கலாம் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.   

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...