Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அரிசி மாஃபியாவிற்கு பதில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதாகும்! பந்துல

T

The Leader Desk

ஜனவரி 17, 2022 • 4:50 PM

அரிசி மாஃபியாவிற்கு பதில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதாகும்! பந்துல

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலன்னறுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2020ம் ஆண்டு 16,000 மெற்றிக் தொன் அரிசியே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
  • ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

பொலன்னறுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

உலகளாவிய நெருக்கடிகள் ஏதும் இல்லாத போது நல்லாட்சி அரசாங்கம் 2014 இல் 600,000 மெற்றிக் தொன் அரிசியும், 2015 இல் 286,000 மெற்றிக் தொன் அரிசியும், 2016 இல் 29,000 மெற்றிக் தொன் அரிசியும், 2017ம் ஆண்டு 745,000 மெற்றிக் தொன் அரிசியும், 2018இல் 249,000 மெற்றிக் தொன் அரிசியும் இறக்குமதி செய்திருந்தது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2020ம் ஆண்டு 16,000 மெற்றிக் தொன் அரிசியே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரிசி இறக்குமதி நடவடிக்கையானது, அரிசி மாபியா நுகர்வோரை சுரண்டுவதைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியின்றி அனைத்தையும் இறக்குமதி செய்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரிசி மாஃபியாவிற்கு பதில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதாகும்! பந்துல | Tamil Leader | We Lead the Nation