Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஐ.தே.கட்சிக்கு நான்கு தேசியப் பட்டியல்!

T

The Leader Desk

ஜனவரி 17, 2022 • 4:15 PM

ஐ.தே.கட்சிக்கு நான்கு தேசியப் பட்டியல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஈடாக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
  • பொதுஜன பெரமுன தனக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் நான்கினை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க வேண்டுமாயின் பொதுஜன பெரனமுனவின் நான்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
  • இந்த அரசியல் வேலைத்திட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவே முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

இந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஈடாக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

நான்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கினால், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 10 பேரை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதி வழங்கியுள்ளதாக பேசப்படுகிறது.

இந்த அரசியல் வேலைத்திட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவே முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த இணக்கத்தின் அடிப்படையிலேயே அவர் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி சம்பவத்தின் பல குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக நீதியான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன தனக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் நான்கினை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க வேண்டுமாயின் பொதுஜன பெரனமுனவின் நான்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே இருக்கின்றது. அந்த பதவியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வகித்து வருகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...