Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உவிந்து விஜேவீர புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார்!

T

The Leader Desk

ஜனவரி 16, 2022 • 8:05 AM

உவிந்து விஜேவீர புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்டியில் அஸ்கிரிய விகாரையின் பிரதி ஆவண காப்பாளர் நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
  • உவிந்து விஜேவீரவின் தந்தை ரோஹன விஜேவீர(Rohana Wijeweera), இலங்கையில் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் இரண்டு ஆயுத கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார்.
  • இதனையடுத்து 90 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சியில் உயிர் தப்பிய சோமவன்ச அமரசிங்க (Somavansa Amarasinghe)உட்பட மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களால் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் கட்டியெழுப்பட்டது.
எழுத்து அளவு:

கண்டியில் அஸ்கிரிய விகாரையின் பிரதி ஆவண காப்பாளர் நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.

தான் ஆரம்பிக்கும் அரசியல் அமைப்பு சுயாதீன அமைப்பு எனவும் எந்த அரசியல் கட்சிகளுடனும் தானும் தனது உறுப்பினர்களும் சம்பந்தப்பட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் இணங்கக் கூடிய, நாட்டைகட்டியெழுப்பும் தேசிய சிந்தனையை தொனிப் பொருளாக கொண்டதாக புதிய கட்சி இருக்கும். தேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்த பின்னர் பொது மக்கள் இணைய கூடியதான பெயர், நிறத்துடன் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் உவிந்து விஜேவீர குறிப்பிட்டுள்ளார்.

உவிந்து விஜேவீரவின் தந்தை ரோஹன விஜேவீர(Rohana Wijeweera), இலங்கையில் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் இரண்டு ஆயுத கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். எனினும் அவை தோல்வியில் முடிந்தன.

இந்த கிளர்ச்சிகள் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் இறுதியில் விஜேவீர உட்பட ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து 90 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சியில் உயிர் தப்பிய சோமவன்ச அமரசிங்க (Somavansa Amarasinghe)உட்பட மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களால் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் கட்டியெழுப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...