Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

போரில் எப்படி உதவினோம், சீனா நினைவுபடுத்தியது!

T

The Leader Desk

ஜனவரி 15, 2022 • 4:42 PM

போரில் எப்படி உதவினோம், சீனா நினைவுபடுத்தியது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எவ்வாறெனினும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும், ஸ்ரீலங்காவில் சீனாவுடன் போட்டிபோடும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
  • “ஸ்ரீலங்காவின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • ஸ்ரீலங்கா தொடர்பில் சீனா இரகசிய நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளது என்ற பிரச்சாரத்தை நிராகரித்த சீன தூதுவர், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

"பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்காவிற்கு உதவ ஏனைய நாடுகள் தயக்கம் காட்டினாலும், சீனா ஸ்ரீலங்காவிற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து பல தசாப்தங்களாக நீடித்த போரை வெற்றிகரமாக நிறைவு செய்தது” என தெரிசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவிடம் ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் கி செங்கோங் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும், ஸ்ரீலங்காவில்  சீனாவுடன் போட்டிபோடும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பில் சீனா இரகசிய நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளது என்ற பிரச்சாரத்தை நிராகரித்த சீன தூதுவர், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“மூன்று தீவுகளில் மின் உற்பத்தித் திட்டங்கள் இரத்து செய்யப்படுவதால் ஸ்ரீலங்கா பெரும் இழப்பை சந்தித்துள்ளது.  இந்த திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் விலைமனுகோரல் விடுக்கப்பட்டு, சீன தனியார் துறையால் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கும் சீனத்  தூதரகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சுதந்திர’ வர்த்தக ஒப்பந்தங்கள்

ஸ்ரீலங்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்காவின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த கடன் நெருக்கடியை ஸ்ரீலங்கா வெல்லும் என நான் நினைக்கிறேன். இந்த சிரமங்கள் தற்காலிகமானவை. எது எவ்வாறாயினும், சீன-ஸ்ரீலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஸ்ரீலங்காவிற்கு நீண்டகால சலுகையாக அமையும்” என செங் ஹாங் தெரிவித்துள்ளார்.

உத்தேச சீன-ஸ்ரீலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஸ்ரீலங்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டை சீன தூதுவர் கடுமையாக மறுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

போரில் எப்படி உதவினோம், சீனா நினைவுபடுத்தியது! | Tamil Leader | We Lead the Nation