Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மேலும் தாமதமடையாமல் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

T

The Leader Desk

ஜனவரி 14, 2022 • 2:40 PM

மேலும் தாமதமடையாமல் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மேலும் தாமதமடையாமல், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் வௌிநாட்டு கையிருப்பு மூன்று பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள போதிலும் அதில் எவ்வளவு தொகையை பயன்படுத்த முடியும் என்பதனை ஆராய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதாரத்தின் இவ்வாறான பின்னடைவு பெரும்பாலும் நாட்டின் சட்டவாட்சிக்கும் நிர்வாகத்திற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மேலும் தாமதமடையாமல், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்க அதிகரிப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, கையிருப்பு தட்டுப்பாடு, வௌிநாட்டவர்களுக்கு பணம் அனுப்ப முடியாமை, கடன் தரப்படுத்தலில் இலங்கை பின்தள்ளப்பட்டமை, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை, சில விமான நிலையங்களுக்கான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக வௌியாகும் தகவல்கள் மற்றும் மின்சார நெருக்கடியினால் ஏற்பட முடியுமான பாதிப்புகளினால் இந்த அவசர தேவை உணரப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் இவ்வாறான பின்னடைவு பெரும்பாலும் நாட்டின் சட்டவாட்சிக்கும் நிர்வாகத்திற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் வௌிநாட்டு கையிருப்பு மூன்று பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள போதிலும் அதில் எவ்வளவு தொகையை பயன்படுத்த முடியும் என்பதனை ஆராய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் நிலைமையினால் அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்வதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த சவால்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நிலையான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான தொழில்நுட்ப விசேட நிபுணத்துவம் பெற்ற உள்நாட்டு, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன மற்றும் பக்கசார்பற்ற நிபுணர்கள், நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...