Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

விவசாயிகளை இந்த அரசாங்கம் ஆபத்தில் தள்ளி விட்டது மனோவின் பொங்கல் உரை...!

T

The Leader Desk

ஜனவரி 14, 2022 • 2:27 PM

விவசாயிகளை இந்த அரசாங்கம் ஆபத்தில் தள்ளி விட்டது மனோவின் பொங்கல் உரை...!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா, கொழும்பு வெள்ளவத்தை காலி வீதி சந்தைக்கு எதிரில் நடைபெற்றது.
  • ஆனால், தீர்வுக்கான வழி பிறந்து விட்டது என நான் எண்ணுகிறேன்.
  • ஜமமு கட்சி உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர் ரெலோ கட்சி பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருடன் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா, கொழும்பு வெள்ளவத்தை காலி வீதி சந்தைக்கு எதிரில் நடைபெற்றது. ஜமமு கட்சி உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர் ரெலோ கட்சி பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருடன் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தை பிறந்தால் வழி பிறகும் என நாம் பாரம்பரியமாக கூறி வருகிறோம். தீர்வு பிறக்கும் எனவும் கூறி வருகிறோம். இந்த வருடம் தை இன்று பிறந்துள்ளது. இந்த தையில் தீர்வு பிறக்கவில்லை. ஆனால், தீர்வுக்கான வழி பிறந்து விட்டது என நான் எண்ணுகிறேன். அதோ தீர்வு வருகிறது என கை காட்ட கூடிய, குறி சொல்ல கூடிய வழி பிறந்து விட்டது என நான் எண்ணுகிறேன்.

நாட்டின் நெல் விளைச்சலை, காய்கறி விளைச்சலை, கிழங்கு விளைச்சலை அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கு கட்டாயமாக உரம் தேவை. இன்று இந்நாட்டில் இந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான கொள்கை காரணமாக உரம் இல்லை.

அதனால் விளைச்சலை அதிகரிக்க சூரிய பகவானை கைகூப்பி வணங்கும், நன்றி தெரிவிக்கும் இந்த நல்ல நாளில், விவசாயிகளின் துன்பத்தை கரிசனையில் எடுக்க வேண்டியுள்ளது.

இது ஒரு விவசாய நாடு. விவசாய மக்கள் மத்தியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பெளத்தர், இந்து, இஸ்லாமியர், கத்தோலிக்கர் இருக்கின்றார்கள். இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாய குடும்பங்களை சார்ந்த ஐயாமார்களும் அம்மாமார்களும்தான்.  இந்த பெரும்பான்மையினரை இந்த அரசாங்கம் ஆபத்தில் தள்ளி விட்டது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விவசாயிகளை இந்த அரசாங்கம் ஆபத்தில் தள்ளி விட்டது மனோவின் பொங்கல் உரை...! | Tamil Leader | We Lead the Nation