Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வன்னி ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு சஜித்திடமிருந்து பதில்!

T

The Leader Desk

ஜனவரி 14, 2022 • 5:27 AM

வன்னி ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு சஜித்திடமிருந்து பதில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கில் தாய்மார்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரின் தீர்வு என்ன என ஊடகவியலாளர்கள் வன்னியில் சஜித் பிரேமதாசவிடம் கேட்டிருந்தனர்.
  • எவ்வாறாயினும், அதிகாரம் மிக்க பதவிகளை வகித்த அரசாங்கத்தினால் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு முடிவு காண பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விரிவாகக் கூறவில்லை.
  • வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி வடக்கில் நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 108 பெற்றோர்கள் பிள்ளைகளின் கதி என்னவென்று தெரியாமல் தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கில் தாய்மார்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரின்  தீர்வு என்ன என ஊடகவியலாளர்கள் வன்னியில் சஜித் பிரேமதாசவிடம் கேட்டிருந்தனர்.

அனைத்து போர்க்கால நடவடிக்கைகளுக்கும் "முடிவு" இருக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொள்கிறார். அந்த முடிவை உருவாக்க ஒரு 'முறைமை' தேவை என அவர் வலியுறுத்துகிறார்.

"குறிப்பாக மக்களின் நல்லிணக்கத்தின் மூலம், குடும்பத்தை இழந்தவர்களின் குறைகள், கண்ணீர், வலிகள் மற்றும் துக்கங்களை நிவர்த்தி செய்யும் திட்டத்தை நாங்கள் மீண்டும் தொடங்குவோம் அதற்காக அபிவிருத்தி, நலத்திட்டங்கள் தேவை."

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியாகவே தற்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரி ரணில் ஆட்சியில் வீடமைப்பு, நிர்மாண மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்தவரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கருத்துதெரிவித்தார்.

எவ்வாறாயினும், அதிகாரம் மிக்க பதவிகளை வகித்த அரசாங்கத்தினால் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு முடிவு காண பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விரிவாகக் கூறவில்லை.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி வடக்கில் நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 108 பெற்றோர்கள் பிள்ளைகளின் கதி என்னவென்று தெரியாமல் தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கிய பதிலை கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...