Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து ஐவர் பலி!

T

The Leader Desk

ஜனவரி 13, 2022 • 6:30 PM

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து ஐவர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய பல பயணிகளின் துயரமான படங்கள் வெளியாகியுள்ளன.
  • மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே குவாஹட்டி - பிக்கானர் அதிவிரைவு ரயிலின் 12 பெட்டிகள் இன்று தடம் புரண்டன.
  • இதில் குறைந்தது ஐந்து பேர் பலியானார்கள், 45 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிடிஐ செய்தி நிறுவன தகவல்கள் கூறுகின்றன.
  • ரயில் தடம் புரண்டதால் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டதாக மேற்கு வங்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

அந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய பல பயணிகளின் துயரமான படங்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே குவாஹட்டி - பிக்கானர் அதிவிரைவு ரயிலின் 12 பெட்டிகள் இன்று தடம் புரண்டன. இதில் குறைந்தது ஐந்து பேர் பலியானார்கள், 45 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிடிஐ செய்தி நிறுவன தகவல்கள் கூறுகின்றன.

இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாளை காலை விபத்து நடந்த பகுதிக்கு செல்லவருக்கிறார். ரயில் தடம் புரண்டதால் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டதாக மேற்கு வங்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 24 பேர் ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கும், 16 பேர் மொய்னகுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த பயணிகள் சிலிகுரியில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடம் புரண்ட பெட்டிகளுக்குள் இன்னும் சில பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், சிதைந்த பெட்டிகளை வெட்டுவதற்கு எரிவாயு கட்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நிலைமையை "தனிப்பட்ட முறையில்" கண்காணித்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோதியிடம் பேசி மீட்புப் பணிகள் குறித்து விளக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...