Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

எரிவாயு, மண்ணெண்ணெய் வேண்டும்! சுதந்திர வர்த்தக வலயப் பெண்கள் பசிலிடம் கோரிக்கை

T

The Leader Desk

ஜனவரி 11, 2022 • 6:55 AM

எரிவாயு, மண்ணெண்ணெய் வேண்டும்! சுதந்திர வர்த்தக வலயப் பெண்கள் பசிலிடம் கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • “நாடு தழுவிய எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
  • மேலும், தற்போது 20 காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக டீலர்களுக்கு கூடுதல் காஸ் சிலிண்டர்களை வழங்க வேண்டும்” என சந்திர தேவநாராயணா நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
  • RED அமைப்பின் கூற்றுப்படி, மிகக் குறைந்த ஊதியத்தில் சிறிய தங்குமிடங்களில் வசிக்கும் இந்த வர்த்தக வலய தொழிலாளர்கள், இப்போது தங்கள் பெரும்பாலான நேரத்தை உண்ணாவிரதத்தில் செலவிடுகிறார்கள்.
  • எப்போதாவது சிரமப்பட்டுக் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொட்டலத்தின் விலை 250 ரூபாய்க்கு மேல்.
எழுத்து அளவு:

“நாடு தழுவிய எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அவர்களில், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் ஆடைத் துறையில் பணிபுரியும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், '' என்று சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண்களுக்காக பணிபுரியும் RED என்ற ( [Revolutionary Existence for Human Development] மனித வளர்ச்சிக்கான புரட்சிகர அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அந்தக் குழுவின் தலைவர் சந்திரா தேவநாராயண கடிதம் எழுதியுள்ளார்.

வார நாட்களில் வர்த்தக வலயத் தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமைகளுக்கு ஏற்ப காலை முதல் இரவு வரை பணிபுரிவதால் வரிசையில் காத்திருக்கவோ, துண்டு டிக்கெட் பெறவோ நேரமில்லை என்று RED அமைப்பு கூறுகிறது.

எரிவாயு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுதந்திர வர்த்தக மண்டலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எரிவாயு விநியோக முறையை ஞாயிற்றுக்கிழமைகளில் உருவாக்குங்கள். மேலும், தற்போது 20 காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக டீலர்களுக்கு கூடுதல் காஸ் சிலிண்டர்களை வழங்க வேண்டும்” என சந்திர தேவநாராயணா நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

RED அமைப்பின் கூற்றுப்படி, மிகக் குறைந்த ஊதியத்தில் சிறிய தங்குமிடங்களில் வசிக்கும் இந்த வர்த்தக வலய தொழிலாளர்கள், இப்போது தங்கள் பெரும்பாலான நேரத்தை உண்ணாவிரதத்தில் செலவிடுகிறார்கள்.

எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடி காரணமாக உணவு மற்றும் பானங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் சாப்பாடு கூட கிடைப்பது கடினம். எப்போதாவது சிரமப்பட்டுக் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொட்டலத்தின் விலை 250 ரூபாய்க்கு மேல். வர்த்தக வலயத் தொழிலாளர்கள் இவ்வாறான பணத்தை அன்றாடம் எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளதாக நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...