Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! சஜித்

T

The Leader Desk

ஜனவரி 10, 2022 • 4:16 PM

மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! சஜித் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முல்லைத்தீவில் இன்று (10) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.
  • தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும்.
  • இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா?
எழுத்து அளவு:

முல்லைத்தீவில் இன்று (10) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன் பலர் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும். எதையும் செய்வதற்கு முன்னும் மக்கள் வாழ வேண்டும் என்பதை நான் அரசாங்கத்திற்கு கூற விரும்புகிறேன். மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் வழங்குவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எரிபொருளை இழந்தால் நாட்டின் தொழில் அமைப்பும் சமூக அமைப்பும் சீரழியும். இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள்,டொலர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு திறன் இல்லை,

இனங்கள், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை பரப்பி அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவதுதான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயலாகும்.

அரசாங்கம் அவ்வாறு செயற்படும் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்கு மூச்சுக்கைக் கொண்டு வந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மறுபுறம், தகவல் தொழில்நுட்ப புரட்சி திட்டம் திட்டத்தை பாடசாலை கட்டமைப்புக்கு கொண்டு வந்து நவீன கல்வி, கணினி கல்வியறிவு, தகவல் தொடர்பு கல்வியறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.

அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுதபாணியாக்கும் அதேவேளையில், நல்ல சுகாதாரத் திட்டங்களையும், நல்ல கல்வித் திட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். இதுதான் அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் உள்ள வித்தியாசம்.”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...