Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு சொகுசு புகையிரதம்!

T

The Leader Desk

ஜனவரி 10, 2022 • 7:21 AM

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு சொகுசு புகையிரதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் முதல் பயணம் நேற்று காலை 5.10 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்டைந்தது.
  • இந்த புகையிரதம் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
  • காங்கேசன்துற​ புகையிரத நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
  • நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் சக்தி வாய்ந்த 02 எஞ்ஜின்கள் உள்ளன, இவை அனைத்தும் குளிரூட்டப்பட்டவை.
எழுத்து அளவு:

இதன் முதல் பயணம் நேற்று காலை 5.10 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்டைந்தது.

இந்த புகையிரதம் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும். காங்கேசன்துற​ புகையிரத நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் சக்தி வாய்ந்த 02 எஞ்ஜின்கள் உள்ளன, இவை அனைத்தும் குளிரூட்டப்பட்டவை.

மேலும், இந்த புகையிரத பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வசதியான இருக்கைகள், உணவு உண்பதற்கான அறை   தொலைக்காட்சி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த புகையிரத சேவைகளைப் பெற விரும்பும் பயணிகள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த புகையிரதத்தின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாவாகும். இந்த புகையிர​தத்தை பாதுகாக்க புகையிரத திணைக்களம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த புகையிரத சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலயைத்தை சென்றடைந்தது இதில் அமைச்சருடன், புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மற்றும் அதிகாரிகள் குழுவுடன் சென்றிருந்தனர்.

train 3train sw

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு சொகுசு புகையிரதம்! | Tamil Leader | We Lead the Nation