Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தடைசெய்யப்பட்ட தொழில் முறையில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!

T

The Leader Desk

ஜனவரி 8, 2022 • 4:53 PM

தடைசெய்யப்பட்ட தொழில் முறையில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது.
  • அத்துடன் அகில இலங்கை ரீதியாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எட்டப்படும்.
  • இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது.

இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளின் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் காரணமாக வடபகுதி மீனவர்களின் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

2500 இந்திய இழுவைப் படகுகளை தடை செய்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தலைநகர் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். அத்துடன் அகில இலங்கை ரீதியாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எட்டப்படும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியவாறு நாம் போராட்டத்தை கைவிட்டிருந்தோம். ஆனால் இந்திய மீனவர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வடமராட்சிப் பகுதியில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...